/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
உள் வாடகைக்கு விட்டால் கடும் நடவடிக்கை: கலெக்டர்
/
உள் வாடகைக்கு விட்டால் கடும் நடவடிக்கை: கலெக்டர்
ADDED : பிப் 21, 2024 01:31 AM
ராசிபுரம்:நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய பகுதியில் ஆய்வு மேற்கொண்ட கலெக்டர், 'அங்கு உள் வாடகைக்கு விட்டிருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என எச்சரிக்கை விடுத்தார்.
ராசிபுரம் யூனியன், அணைபாளையம் பகுதியில் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில், 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. நேற்று குடியிருப்பு பகுதிகளை கலெக்டர் உமா பார்வையிட்டார். மேலும், மொத்த குடியிருப்புகளின் எண்ணிக்கை, தற்போது வசித்து வருபவர்களின் எண்ணிக்கை, அடிப்படை வசதிகள் குறித்து அங்குள்ள பொதுமக்களிடம் கலந்துரையாடினார். யாராவது விதிமுறைக்கு மீறி உள் வாடகைக்கு விட்டிருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து சென்றார். ஆய்வின் போது, தாசில்தார் சரவணன் மற்றும் வி.ஏ.ஓ., உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.

