ADDED : நவ 13, 2026 05:46 AM
ராசிபுரம்:நாமக்கல்
மாவட்டம், ராசிபுரம் அடுத்த சின்னக்காக்காவேரியை சேர்ந்தவர்
சின்னமணி, 40, கூலி தொழிலாளி. இவரது மகள் கவுரி, 13,
நாமகிரிப்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஏழாம் வகுப்பு
படிக்கிறார். வழக்கம்போல் நேற்று காலை கவுரியின் தாத்தா பெருமாள், அவரை
பள்ளியில் விட்டு சென்றுள்ளார்.
இதற்கிடையே
வீட்டில் சார்ஜ் போட்டிருந்த மொபைல் போன் காணாமல் போனதால், சின்னமணி
அந்த எண்ணிற்கு தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் போன் இணைப்பு
துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் சந்தேகமடைந்த அவர், பள்ளிக்கு
சென்று சக மாணவியரிடம் விசாரித்தார். அப்போது கவுரி மொபைல் போனை
எடுத்து வந்திருந்ததும், தான் சேலத்தில் உள்ள அக்கா வீட்டிற்கு
செல்வதாக கூறி விட்டு, ராசிபுரம் செல்லும் தனியார் பஸ்சில் ஏறி
சென்றதும் தெரியவந்தது.
இது குறித்து சின்னமணி கொடுத்த புகாரின்படி, நாமகிரிப்பேட்டை போலீசார் வழக்கு பதிந்துமாணவியை தேடி வருகின்றனர்.
