ADDED : நவ 04, 2026 06:57 AM
நாமக்கல்:நாமக்கல்
அடுத்த நல்லிபாளையம் திருநகரை சேர்ந்த செந்தில்குமார் மகன் சுஜய்,
20. இவர், பொறியியல் கல்லுாரியில், இறுதி ஆண்டு படித்து வருகிறார்.
கடந்த, 30ல் விடுமுறைக்கு வீட்டுக்கு வந்துள்ளார்.
இந்நிலையில்
கடந்த, 1ல், மாலை, 4:45 மணிக்கு லக்கம்பாளையம் யாழ் நகரில், மொபைல்
போனில் பேசிக்கொண்டே நடைபயிற்சி சென்றார். அப்போது, அவ்வழியாக
டி.வி.எஸ்., மொபெட்டில் பின்னால் வந்த இரண்டு வாலிபர்கள், மொபைல் போனை
பறித்துக் கொண்டு தப்பி சென்றனர். இது குறித்து, நல்லிபாளையம்
போலீசில் புகார் செய்யப்பட்டது.
புகாரின் பேரில் போலீசார் வழக்கு
பதிந்து நடத்திய விசாரணையில், நாமக்கல் நடராஜபுரம், 4வது தெருவை
சேர்ந்த, 17 வயது சிறுவன் என்பதும், மாரிகங்கானி தெருவை சேர்ந்த
உமாசங்கர், 23 என்பதும் தெரியவந்தது.
அவர்களை கைது செய்த
போலீசார், நாமக்கல் ஜே.எம்., 1ல் ஆஜர்படுத்தப்பட்டு, உமாசங்கரை,
சேலம் மத்திய சிறையிலும், 17 வயது சிறுவனை சிறார் சீர்த்திருத்த
பள்ளியிலும் அடைத்தனர்.
