ADDED : அக் 08, 2026 03:30 AM
நாமக்கல்:நாமக்கல்
அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் ஒருங்கிணைந்த சுகாதாரம், மனநலம்
மற்றும் பாதுகாப்பு திட்டம் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு,
நேற்று நடந்தது. தலைமையாசிரியர் சுமதி தலைமை வகித்தார்.
சைபர் கிரைம்
ஏ.டி.எஸ்.பி., விஜயராகன் பங்கேற்று, மாணவியரின் இணையதள பாதுகாப்பு
மற்றும் சமூக ஊடகங்களை பாதுகாப்பாக பயன்படுத்துவது, அதனால்
ஏற்படும் பாதிப்பு, பின்விளைவுகள் குறித்து விழிப்புணர்வு
ஏற்படுத்தி பேசினார். முன்னதாக, புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு
கண்காட்சி வாகனத்தை துவக்கி வைத்தார்.தொடர்ந்து, மனநல மருத்துவர்
இந்துமதி, மாணவியரின் மன அழுத்தம், பதற்றம் மற்றும் உணர்ச்சி சார்ந்த
பிரச்னைகள், தற்கொலை எண்ணங்கள் அல்லது தன்னைத்தானே
காயப்படுத்திக்கொள்ளும் எண்ணங்கள் இருப்பதாக தெரிவிக்கும்
மாணவிகளுக்கு உடனடி பாதுகாப்பு, நம்பகமான பெரியவர் ஆதரவு மற்றும்
தகுதியான மனநல நிபுணர் மருத்துவ சேவை மூலம் உதவி கிடைப்பதை உறுதி
செய்து பேசினார்.
சட்டப்பணிகள் ஆணையக்குழு வக்கீல் சரண்யா,
பாலியல் தொல்லை, தகாத அணுகுமுறை உள்ளிட்ட பாதுகாப்பு குறித்த
பிரச்னைகளை அச்சமின்றி தெரிவிக்க ரகசியமான புகார், ஆலோசனை
நடைமுறை ஏற்படுத்துதல் குறித்து பேசினார்.
