/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
நாய் கடித்து மாணவன் படுகாயம் 40 தையல்களுடன் தீவிர சிகிச்சை
/
நாய் கடித்து மாணவன் படுகாயம் 40 தையல்களுடன் தீவிர சிகிச்சை
நாய் கடித்து மாணவன் படுகாயம் 40 தையல்களுடன் தீவிர சிகிச்சை
நாய் கடித்து மாணவன் படுகாயம் 40 தையல்களுடன் தீவிர சிகிச்சை
ADDED : ஜூலை 11, 2025 10:12 PM
கெலமங்கலம்:தெருநாய் கடித்து காயமடைந்த பள்ளி மாணவனுக்கு, 40 தையல் போடப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அருகே தாசனபுரத்தை சேர்ந்தவர் ஈஸ்வர், 30, கட்டட தொழிலாளி. இவரது மனைவி மம்தா, 25. இவர்களுக்கு இரு ஆண், இரு பெண் குழந்தைகள் உள்ளனர்.
இரண்டாவது மகன் ராம்சரண், 8, அப்பகுதி அரசு பள்ளியில், மூன்றாம் வகுப்பு படிக்கிறார்.
இரு நாட்களுக்கு முன், பள்ளி சென்று திரும்பிய மாணவன், நண்பர்களுடன் விளையாடி கொண்டிருந்தார். அங்கிருந்த கோழி பண்ணையில் இருந்து வெளியே வந்த நாய், மாணவன் ராம்சரணை விரட்டி சென்று தலை, முதுகு, காது, மூக்கு, கன்னம் ஆகிய இடங்களில் கடித்து குதறியது.
படுகாயமடைந்த மாணவனை மீட்ட பெற்றோர், ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். மாணவனின் உடலில், 40 இடங்களில் தையல் போடப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
ஓசூர் தர்கா பகுதியை சேர்ந்த தனியார் வங்கியில் வேலை பார்த்து வரும் முத்துலட்சுமி, 25, என்பவர், ஓசூர் தேர் பேட்டை பகுதியில் பைக்கில் சென்ற போது, அங்கு சுற்றித்திரிந்த தெருநாய், அவரை துரத்தி கடித்தது. காலில் படுகாயமடைந்த அவர், ஓசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்.
இரு நாட்களுக்கு முன், தளி அருகே தின்னுாரை சேர்ந்த பட்டதாரி வாலிபர் எட்வின் பிரியன், தெருநாய் கடித்து ரேபிஸ் தாக்குதலுக்கு ஆளாகி இறந்தார். அதன் பின், அடுத்தடுத்து நாய் கடி குற்றங்கள் அரங்கேறி வருகின்றன.
எனவே ஓசூர் மாநகராட்சி மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் தெரு நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியினர் வலியுறுத்துகின்றனர்.

