/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பழங்கால நாணய கண்காட்சி மாணவர்கள் கண்டு வியப்பு
/
பழங்கால நாணய கண்காட்சி மாணவர்கள் கண்டு வியப்பு
ADDED : ஆக 27, 2025 01:26 AM
பள்ளிப்பாளையம் பள்ளிப்பாளையம் அருகே, வெப்படை தனியார் பள்ளியில் பழங்கால நாணய கண்காட்சி நேற்று நடந்தது.
பழங்கால நாணய சேகரிப்பாளர் தாமரைராஜ், மாணவர்களுக்கு விளக்கமளித்தார். இந்த கண்காட்சியில், 200 ஆண்டு பழமையான அரசர் காலத்து நாணயங்கள், சேர, சோழ, பாண்டியர் கால
நாணயங்கள், மைசூர் நாணயம், மதுரை நாயக்கர், திப்பு சுல்தான் காலத்து செம்பு நாணயங்கள்,
ஒரு பைசா, இரண்டு
பைசா, அஞ்சு பைசா, பத்து பைசா உள்ளிட்ட நாணயங்கள், அமெரிக்க டாலர், நைஜீரியா நாட்டின் நயரியா நாணயம், பங்களாதேஷ் நாட்டின் டாக்கா, ஸ்ரீலங்கா உள்ளிட்ட, 194 நாடுகளின் நாணயம் மற்றும் ரூபாய் நோட்டுகள்.
பண்டைய கால போர் கருவிகள், பழங்காலத்தில்
பயன்படுத்திய ஆபரணங்கள், சிலம்பு, வானொலி, தபால்
அட்டைகள், இசைக்கருவிகள், பீரங்கி குண்டுகள், பண்டைய கால கடிகாரம், இரும்பு
பெட்டி, சிற்றரசர்கள் பயன்படுத்திய வாள் உள்ளிட்ட பல்வேறு பழங்கால பொருட்களை கண்காட்சியில் இடம் பெற்றிருந்தன. இதை மாணவர்கள் கண்டுவியப்படைந்தனர்.