/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மாணவர் சாவில் சந்தேகம்; தந்தை பரபரப்பு புகார்
/
மாணவர் சாவில் சந்தேகம்; தந்தை பரபரப்பு புகார்
ADDED : ஜன 08, 2025 06:49 AM
நாமக்கல்: கரூர் மாநகராட்சிக்குட்பட்ட வடிவேல் நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் அஜய், 17. இவர், நாமக்கல், கூலிப்பட்டியில் உள்ள தனியார் பள்ளி விடுதியில் தங்கி, பிளஸ் -2 படித்து வந்தார். நேற்று முன்தினம் விடுதியின் மொட்டை மாடிக்கு சென்ற அஜய், அங்கிருந்து குதித்து விட்டதாக கூறப்படுகிறது. அதில் படுகாயமடைந்த அஜய் உயிரிழந்தார்.
இதுகுறித்து, அஜயின் தந்தை ராஜேந்திரன் கூறியதாவது: என் மகன், பிளஸ் 1ல் இருந்து இப்பள்ளியில் தான் படித்து வந்தார். ஆரம்பத்தில் இருந்தே விடுதி மாணவர்கள் இடையே பிரச்னை இருப்பதாகவும், நிர்வாகம் கவனிப்பு இல்லை என்றும் சொல்லி வந்தார். அதற்கு வார்டன்கள் சரி செய்து விடுவோம் என்றனர். இந்நிலையில், என் மகன் மாடியில் இருந்து விழுந்து இறந்துள்ளார். அவரது சாவில் சந்தேகம் இருப்பதால், போலீசார் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என, புகாரளித்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.