/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மின்சார வாகனம் வடிவமைத்த நாமக்கல் பிஜிபி பொறியியல் கல்லுாரி மாணவர்கள்
/
மின்சார வாகனம் வடிவமைத்த நாமக்கல் பிஜிபி பொறியியல் கல்லுாரி மாணவர்கள்
மின்சார வாகனம் வடிவமைத்த நாமக்கல் பிஜிபி பொறியியல் கல்லுாரி மாணவர்கள்
மின்சார வாகனம் வடிவமைத்த நாமக்கல் பிஜிபி பொறியியல் கல்லுாரி மாணவர்கள்
ADDED : ஜூன் 06, 2025 01:18 AM
நாமக்கல், நாமக்கல், பிஜிபி பொறியியல் கல்லுாரி இறுதியாண்டு மின்னணுவியல் மாணவர்கள் மின்சாரம் மற்றும் பேட்டரி மூலம் இயங்கக்கூடிய வாகனம் வடிவமைத்துள்ளனர்.
இவை சுற்றுச்சூழலுக்கு உகந்தவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாணவ, மாணவியரிடையே தேடலும் விழிப்புணர்வும் அதிகரித்து வருகிறது.
இந்த வாகனத்தை சார்ஜ் செய்ய, சூரியஒளி ஆற்றலை மாணவர்கள் பயன்படுத்துகின்றனர். அதனால் எரிபொருள் செலவு முற்றிலும் இல்லை. இத்தகைய தொழில்நுட்பம் சார்ந்த திட்டத்தை, பிஜிபி பொறியியல் கல்லுாரி மாணவர்கள் சிறப்பாக செயல்படுத்தி உள்ளனர். இதை கல்லுாரிக்கு வருகை தரும் பெற்றோர்கள், விருந்தினர்கள் மற்றும் மாணவ, மாணவியர் என அனைவரும் பயன்படுத்துகின்றனர். இதனால், மாணவ மாணவியர் திறன்
மேம்படுகிறது.
வரும் நாட்களில், மின்சார வாகனம் தொடர்பான மேற்படிப்பு, ஆராய்ச்சி தொழில் முனைவோர் போன்றவற்றில் கவனம் செலுத்த இக்கல்லுாரி ஊக்குவிக்கிறது.
சாதனை புரிந்த பிஜிபி பொறியியல் கல்லுாரி மாணவ, மாணவியரை பிஜிபி குழுமத்தின் தலைவர் பழனி ஜி பெரியசாமி, துணைத்தலைவர் விசாலாட்சி பெரியசாமி வெகுவாக பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
தாளாளர் கணபதி, முதன்மையர் முனைவர் பெரியசாமி, முதல்வர் முனைவர் கவிதா மற்றும் பேராசிரியர்கள் பாராட்டு தெரிவித்தனர்.