/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கொல்லிமலையில் வல்வில் ஓரி விழா போட்டியில் பங்கேற்ற மாணவர்கள்
/
கொல்லிமலையில் வல்வில் ஓரி விழா போட்டியில் பங்கேற்ற மாணவர்கள்
கொல்லிமலையில் வல்வில் ஓரி விழா போட்டியில் பங்கேற்ற மாணவர்கள்
கொல்லிமலையில் வல்வில் ஓரி விழா போட்டியில் பங்கேற்ற மாணவர்கள்
ADDED : ஜூலை 30, 2025 01:34 AM
நாமக்கல், கொல்லிமலை வல்வில் ஓரி விழாவையொட்டி நடந்த கட்டுரை, பேச்சு போட்டியில், 43 மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.ஆண்டுதோறும், ஆடிப்பெருக்கை முன்னிட்டு, நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் வல்வில் ஓரி விழா மற்றும் மலர் கண்காட்சி, சுற்றுலா விழா நடப்பது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டு விழா வரும், 2, 3ல் நடக்கிறது. விழாவை முன்னிட்டு, மாணவ, மாணவியருக்கான கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டி, நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.
அரசு பள்ளி, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த, 43 மாணவ, மாணவியர் பங்கேற்றனர். கட்டுரை போட்டியில், சேந்தமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி ரேணுகா முதலிடம், எருமப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர் தரணீஷ் இரண்டாமிடம், எர்ணாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி காவ்யா மூன்றாமிடம் பிடித்தனர்.
பேச்சு போட்டியில், திருச்செங்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர் நிரஞ்சன், சங்ககிரி மேற்கு சங்கர் மேல்நிலைப்பள்ளி மாணவி ஸ்ரீதர்ஷினி, நாமக்கல் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி பனிமலர் ஆகியோர் முதல் மூன்று இடங்களை பிடித்தனர். வெற்றி பெற்ற மாணவ. மாணவியருக்கு ஆக., 3ல் நடக்கும் வல்வில் ஓரி நிறைவு விழாவில், கலெக்டர் துர்கா மூர்த்தி பரிசு வழங்குகிறார். ஏற்பாடுகளை, மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் சந்திரசேகரன் செய்திருந்தார்.