/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மாணவர்கள் உயர்கல்வி பயில்வதற்கான அனைத்து வாய்ப்பையும் பயன்படுத்திக்கொள்ளணும்: கலெக்டர்
/
மாணவர்கள் உயர்கல்வி பயில்வதற்கான அனைத்து வாய்ப்பையும் பயன்படுத்திக்கொள்ளணும்: கலெக்டர்
மாணவர்கள் உயர்கல்வி பயில்வதற்கான அனைத்து வாய்ப்பையும் பயன்படுத்திக்கொள்ளணும்: கலெக்டர்
மாணவர்கள் உயர்கல்வி பயில்வதற்கான அனைத்து வாய்ப்பையும் பயன்படுத்திக்கொள்ளணும்: கலெக்டர்
ADDED : ஜூன் 17, 2025 02:04 AM
நாமக்கல், ''மாணவர்கள் உயர்கல்வி பயில்வதற்கான அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்,'' என, சிறப்பு குறைதீர் முகாமில், கலெக்டர் உமா பேசினார்.
நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ், உயர் கல்வி வழிகாட்டி சிறப்பு குறைதீர் முகாம், நேற்று நடந்தது. கலெக்டர் உமா தலைமை வகித்து பேசியதாவது:
தமிழக அரசு, மாணவர்களின் உயர்கல்வி பயிலும் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் நோக்கில், பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், 'நான் முதல்வன்' திட்டம் மூலம், பிளஸ் 2 தேர்ச்சி பெற்றுள்ள மாணவர்களை, அதிகமாக உயர்கல்விக்கு சேர்க்கை பெறும் நோக்கில், பல்வேறு விழிப்புணர்வு மற்றும் ஆலோசனை முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ், பிளஸ் 2 பயின்ற மாணவ, மாணவியர்களுக்காக உயர்கல்விக்கு வழிகாட்டும் கல்லுாரி கனவு நிகழ்ச்சி, மூன்று கட்டங்களாக நடத்தப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில், 2023-24, 2024-25ம் கல்வியாண்டில், பிளஸ் 2 பயின்ற மாணவர்கள் அனைவரையும், உயர்கல்விக்கு செல்வதை உறுதி செய்யும் வகையில், கலெக்டர் தலைமையில், கல்லுாரி கனவு, உயர்கல்வி கட்டுப்பாட்டு அறை (கட்டணமில்லா தொலைபேசி எண்: 18004251997, வாட்ஸாப் எண்: 9788858794) சிறப்பு குறைதீர் முகாம் என, பல்வேறு முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அரசு பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவியருக்கு புதுமைப்பெண், தமிழ்புதல்வன் திட்டம் மூலம், மாதந்தோறும் உதவித்தொகை கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது. மாணவர்கள் உயர்கல்வி பயில்வதற்கான அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்தி கொள்ளவேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, கலால் உதவி ஆணையர் ராஜேஸ்குமார், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் கிருஷ்ணவேணி, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் சுரேஷ்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.