/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
விடுதி வாசலில் தேங்கும் மழைநீரால் மாணவியர் அவதி
/
விடுதி வாசலில் தேங்கும் மழைநீரால் மாணவியர் அவதி
ADDED : ஆக 12, 2024 07:01 AM
நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், 650க்கும் மேற்பட்ட மாணவியர் படித்து வருகின்றனர்.
பள்ளி வளாகத்தில் மாணவியருக்கு விடுதி அமைக்கப்பட்டுள்ளது. இதில், 150க்கும் மேற்பட்ட மாணவியர் தங்கி படித்து வருகின்றனர். விடுதியின் பிரதான வாசல், ஆத்துார் மெயின் ரோட்டின் ஓரம் அமைந்துள்ளது. கடந்த சில நாட்களாக பெய்த மழையால் விடுதியின் வாசலில் தண்ணீர் குட்டைபோல் தேங்கி நிற்கிறது.விடுமுறை தினமான, நேற்று காலை மாணவியர் வெளியே வர மிகவும் சிரமப்பட்டனர். அதுமட்டுமின்றி சாலையோரம் வாகனங்கள் செல்லும்போது, மழைநீர் அருகில் இருப்பவர்கள் மீதும் தெறிக்கிறது. எனவே சாலையோரம் மழைநீர் தேங்காதவாறு மண் கொட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

