தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ மலேரியா பாதிப்பு குறித்து ஜி.ஹெச்.,ல் ஆய்வு

மலேரியா பாதிப்பு குறித்து ஜி.ஹெச்.,ல் ஆய்வு

மலேரியா பாதிப்பு குறித்து ஜி.ஹெச்.,ல் ஆய்வு


ADDED : மே 10, 2026 04:56 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 10, 2026 04:56 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ராசிபுரம்:ராசிபுரம் மற்றும் கொல்லிமலை சுற்றுவட்டார பகுதிகளில், கடந்த சில மாதங்களுக்கு முன் மலேரியா காய்ச்சல் பாதிப்பு இருந்ததாக கூறப்படுகிறது.

இதை தொடர்ந்து மலேரியா பரவலை தடுக்க பல்வேறு சுகாதார நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இந்நிலையில், நேற்று ராசிபுரம் அரசு மருத்துவமனையில் உலக சுகாதார நிறுவன அதிகாரி டாக்டர் சம்பாநாத் உள்பட, 2 அலுவலர்கள் திடீர் ஆய்வு செய்தனர். ஆய்வின் போது மலேரியா பாதிப்புகள் மற்றும் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து அங்கிருந்த டாக்டர்களிடம் அதிகாரிகள் கேட்டறிந்தனர்.

ராசிபுரம் மருத்துவமனை மட்டுமின்றி, கொல்லிமலை, பேளுக்குறிச்சி உள்ளிட்ட இடங்களிலும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். கடந்த, ஆறு மாதங்களில் மலேரியா பாதிப்பு யாருக்காவது உள்ளதா? அதற்கான முறையான சிகிச்சை வழங்கப்பட்டுள்ளதா? என்பது குறித்தும் அவர்கள் விபரங்களை சேகரித்தனர்.

மலேரியா பரவாமல் தடுக்க மேற்கொள்ளப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் தடுப்பு முறைகள் குறித்து அதிகாரிகளிடம் டாக்டர்கள் விளக்கம் அளித்தனர். இந்த திடீர் ஆய்வால் மருத்துவமனை வளாகத்தில், நேற்று சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us