/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மானிய விலை நிலக்கடலை வெளிச்சந்தையில் விற்பனை
/
மானிய விலை நிலக்கடலை வெளிச்சந்தையில் விற்பனை
ADDED : ஜூலை 26, 2025 01:27 AM
நாமக்கல், 'நிலக்கடலையை மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்காமல், வெளிச்சந்தையில் விற்பனை செய்வது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, இளம் விவசாயிகள் சங்க தலைவர் சவுந்திரராஜன் தலைமையில், நாமக்கல் கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
நாமக்கல் மாவட்டத்தில், வேளாண் துறையின் கீழ் செயல்படும் வேளாண் விரிவாக்க மையத்தில், மானிய திட்டம் மூலம் விவசாயிகளுக்கு நிலக்கடலை வழங்கப்படுகிறது. ஆனால், நாமகிரிப்பேட்டை வேளாண் விரிவாக்க மையத்தில், நிலக்கடலையை விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்குவதில்லை. மாறாக, வெளிச்சந்தையில் விற்பனை செய்து வருகின்றனர். அதனால், விவசாயிகள் கடும் அதிர்ச்சியும், அதிருப்தியும் அடைந்துள்ளனர்.
உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பதுடன், விவசாயிகளுக்கு மானிய விலையில் நிலக்கடலை கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனு அளிக்க வந்தவர்கள், தட்டுகளில், விதை நிலக்கடலை எடுத்து வந்ததிருந்தனர். அதனால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.