/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மானியத்தில் பயறு விதை: விவசாயிகளுக்கு அழைப்பு
/
மானியத்தில் பயறு விதை: விவசாயிகளுக்கு அழைப்பு
ADDED : மே 13, 2025 02:15 AM
ப.வேலுார்:கபிலர்மலை வேளாண்மை உதவி இயக்குனர் ராதாமணி வெளியிட்ட செய்திக்குறிப்பு:கபிலர்மலை வட்டாரத்தில், நடப்பு ஆண்டுக்கான மானாவாரி பகுதி மேம்பாட்டு திட்டத்தில், ஒருங்கிணைந்த பண்ணைய சாகுபடி திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தின் கீழ், சோளம் மானாவாரி பயிர் சாகுபடி மேற்கொள்ள தேவையான இடுபொருட்கள், கறவை மாடு, எருமை, ஆடு, தேனீ வளர்ப்பு பெட்டி, மண்புழு உர உற்பத்தி படுக்கை, பழக்கன்றுகள் ஆகியவை விவசாயிகளுக்கு வழங்கப்பட உள்ளன.
மேற்கண்ட ஒருங்கிணைந்த சாகுபடி இடுபொருட்களுடன் கூடிய வேளாண் சாகுபடி பணிகளை மேற்கொள்ள, 15 பொது விவசாயிகளுக்கும், 5 ஆதிதிராவிடர் விவசாயிகளுக்கும், 50 சதவீத மானியமாக, 30,000 ரூபாய் வழங்கப்படும். இத்திட்டம் தொடர்பான தகவல்களுக்கும், முன்பதிவு குறித்த விபரங்களுக்கும், கபிலர்மலை வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தை தொடர்பு கொண்டோ, உழவன் செயலியில் முன்பதிவு செய்தோ, கபிலர்மலை வட்டார விவசாயிகள் பயன் பெற கேட்டுக்கொள்ளப்படுகிறது.