/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மானிய விலையில் மண்புழு உரப்படுகை
/
மானிய விலையில் மண்புழு உரப்படுகை
ADDED : நவ 10, 2025 01:53 AM
நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டை வட்டார விவசாயிகளுக்கு, மானிய விலையில் இடு பொருட்கள் வழங்கப்படுவதாக வேளாண் உதவி இயக்குனர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
நாமகிரிப்பேட்டை வட்டார விவசாயிகளுக்கு, 6 அடி நீளம், 4 அடி அகலம், 2 அடி உயரம் கொண்ட மண்புழு உரப்படுகை மானிய விலையில் விற்கப்படுகிறது. அதேபோல், மிக குறைந்த விலையில் தரமான இடுபொருட்கள் விற்பனை செய்யப்படுகி-றது.தேவைப்படும் விவசாயிகள் சிட்டா நகல், 1 மற்றும் ஆதார் நகல், 1 ஆகியவற்றுடன் வேளாண்மை அலுவலகத்திற்கு நேரில் வர வேண்டும். விபரங்களுக்கு, 8148354270 என்ற தொலை-பேசி எண்ணை தொடர்புகொள்ளலாம். எனவே, தேவையான விவசாயிகள் வாங்கி பயன்பெறுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

