/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
நாட்டு சர்க்கரை ஆலையை மூடக்கோரி திடீர் மறியல் ஏழரை மணி நேரம் டிராபிக்: போக்குவரத்து பாதிப்பு
/
நாட்டு சர்க்கரை ஆலையை மூடக்கோரி திடீர் மறியல் ஏழரை மணி நேரம் டிராபிக்: போக்குவரத்து பாதிப்பு
நாட்டு சர்க்கரை ஆலையை மூடக்கோரி திடீர் மறியல் ஏழரை மணி நேரம் டிராபிக்: போக்குவரத்து பாதிப்பு
நாட்டு சர்க்கரை ஆலையை மூடக்கோரி திடீர் மறியல் ஏழரை மணி நேரம் டிராபிக்: போக்குவரத்து பாதிப்பு
ADDED : அக் 26, 2024 07:55 AM
ப.வேலுார்: ரங்கம்பாளையத்தில் உள்ள நாட்டு சர்க்கரை ஆலையை மூடக்-கோரி, கரும்பு லாரியை நிறுத்தி விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், கபிலர்மலை - நல்லுார் சாலையில், ஏழரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ப.வேலுார் தாலுகா, கபிலக்குறிச்சி அடுத்த ரங்கம்பாளையத்தில், தேங்காய் நார் மில் செயல்பட்டு வந்தது. அவற்றை வாங்கிய நபர், நாட்டு சர்க்கரை தயாரிக்கும் ஆலையாக மாற்றினார். பழைய சர்க்கரையை எடுத்து வந்து,
ஆகாத கழிவுகளை சேர்த்து, அதிகளவில் ஆசிட் ஊற்றி பில்டர் செய்து, வெளிநாட்டுக்கு அனுப்பப்படுகிறது. மேலும், இந்த கலரில் உள்ள கருப்பு சர்க்க-ரையை அதிகப்படியான ஆசிட்டுகளை ஊற்றி கிளியர் செய்து, கோல்ட்
கலரில் மாற்றி ஏற்றுமதியும் செய்கின்றனர்.
ஆலையில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீரை சுத்திகரிப்பு செய்யாமல், விளை நிலத்தில் வெளியேற்றுகின்றனர். அதேபோல், துர்நாற்றம் வீசுவதால், கிராம மக்கள் கடும் அவதிக்-குள்ளாகின்றனர். மேலும், நிலத்தடி நீர்,
விவசாய கிணறுகள் மாச-டைந்து பயன் படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதனால், ஆவேசமடைந்த கிராம மக்கள், ஆலையை மூடி, 'சீல்' வைக்கக்-கோரி, நேற்று திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்-டனர்.
இப்போராட்டத்தில், ரங்கம்பளையம், சுப்பையாம்பாளையம், செஞ்சுடையம்பாளையம், சீத்தக்காடு, கபிலக்குறிச்சி ஆகிய கிராமங்களை சேர்ந்த, 50க்கும் மேற்பட்ட மக்கள், நேற்று காலை, 8:00 மணிக்கு, சாலை நடுவில் கரும்பு
லாரியை நிறுத்தி, மறி-யலில் ஈடுபட்டனர். தகவலறிந்த, ஆர்.டி.ஓ., சுகந்தி, ப.வேலுார் தாசில்தார் முத்துக்குமார், இன்ஸ்பெக்டர் இந்திராணி மற்றும் போலீசார், சம்பவம் இடத்துக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்-தினர். அப்போது,
ஆலையை மூடுவதற்கு நடவடிக்கை எடுப்ப-தாக உறுதி அளித்தனர்.
இதையடுத்து, மாலை, 3:30 மணிக்கு, மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். சாலை மறியல் போராட்டம் கார-ணமாக, கபிலர்மலை - நல்லுார் சாலையில், ஏழரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.