ADDED : ஆக 05, 2025 01:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாமகிரிப்பேட்டை,நாமகிரிப்பேட்டை சுற்று வட்டார பகுதியில், நேற்று மாலை முதல் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது.
இந்நிலையில் இரவு, 9:00 மணியளவில் திடீரென காற்றுடன் கன மழை பெய்தது. நாமகிரிப்பேட்டை, சீராப்பள்ளி, அரியாகவுண்டம்பட்டி, தண்ணீர்பந்தல்காடு, மூலப்பள்ளிப்பட்டி, வெள்ளக்கல்பட்டி, ஆர்.புதுப்பட்டி உள்ளிட்ட இடங்களில், 30 நிமிடம் கனமழை பெய்தது. தொடர்ந்து துாறல் மழை பெய்தது. இதனால், இரவு குளிர் காற்று வீசியது. திடீர் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்