ADDED : மார் 31, 2026 05:23 AM
நாமகிரிப்பேட்டை, நாமகிரிப்பேட்டை ஒன்றியம், நாரைகிணறு முதல் முள்ளுக்குறிச்சி வரை செல்லும் சாலை குண்டும், குழியுமாக உள்ளதால், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
நாமகிரிப்பேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட நாரைகிணற்றில் இருந்து முள்ளுக்குறிச்சி செல்லும் சாலை, முக்கிய போக்குவரத்து வழித்தடமாக உள்ளது. இந்த பாதையை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த நுாற்றுக்கணக்கான பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் தங்களது அன்றாட தேவைகளுக்காக தினமும் இந்த சாலை வழியாகவே நடந்து மற்றும் வாகனங்களில் சென்று வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக இந்த சாலை முறையாக பராமரிக்
கப்படாமல் இருந்ததால், ஆங்காங்கே தார் பெயர்ந்து சிறிய பள்ளங்கள் ஏற்பட தொடங்கின.தற்போது, இந்த சாலை மிக மோசமான நிலையை எட்டியுள்ளது. சாலை முழுவதும் குண்டும் குழியுமாக மாறி பெரிய பள்ளங்கள் ஏற்பட்டுள்ளதால், இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்களில் செல்வது மிகுந்த சிரமமாக உள்ளது. குறிப்பாக இரவு நேரங்களில் இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பள்ளம் தெரியாமல் விழுந்து விபத்துக்குள்ளாகும் அபாயம் நிலவுகிறது.
