/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
சாக்கடை கட்டும் பணிக்காக தோண்டிய பள்ளத்தால் அவதி
/
சாக்கடை கட்டும் பணிக்காக தோண்டிய பள்ளத்தால் அவதி
ADDED : டிச 15, 2025 07:40 AM
நாமக்கல்: நாமக்கல்-துறையூர் சாலையில், கணேசபுரம் உள்ளது. அங்கு, 1,000க்கும் மேற்பட்ட குடியிருப்-புகள், அரசு மகளிர் கல்லுாரி, தனியார் பள்ளி, மருத்துவமனை, ஹோட்டல் உள்ளிட்ட பல்-வேறு வர்த்தக நிறுவனங்கள் உள்ளன. அங்கு எப்-போதும் போக்குவரத்து அதிகரித்து காணப்படும்.
இந்நிலையில், துறையூர்-திருச்சி இணைப்பு சாலையில், சாக்கடை கால்வாய்க்கு கான்கிரீட் தளம் கட்ட, கடந்த, மூன்று வாரங்களுக்கு முன், அந்த சாலையில் போக்குவரத்தை நிறுத்தி பள்ளம் தோண்டினர். அதன்பின் பணிகளை கிடப்பில் போடப்பட்டதால், வாகன போக்குவ-ரத்து முடங்கியுள்ளது. ஆம்புலன்ஸ் செல்லக்-கூட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது, அப்பகுதி மக்கள் தோண்டிய சக்கடை குழிக்குள் இறங்கி, கடந்து செல்லும் நிலைக்கு தள்ளப்பட்-டுள்ளனர்.

