ADDED : மே 03, 2024 07:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராசிபுரம் : ராசிபுரம் சுற்று வட்டார பகுதியில், நேற்று மாலை ஆலங்கட்டியுடன் கோடை மழை பெய்தது.
ராசிபுரம் சுற்று வட்டார பகுதியில், கடந்த சில வாரங்களாக வெயில் வாட்டி வதைத்தது. பகல் நேரத்தில் அனல் காற்று வீசியது. டூவீலர்களில் செல்வது மிகவும் சிரமமாக இருந்தது. இந்நிலையில் நேற்று காலை முதல் வெப்ப தாக்கம் அதிகமிருந்தது. மாலையில் குளிர் காற்று வீசியதுடன் பலத்த காற்றுடன் கனத்த மழை பெய்தது. தொடக்கத்தில் ஆலங்கட்டி என்றழைக்கப்படும் பனிக்கட்டி மழை பெய்தது. ஆர்.புதுப்பட்டி, வடுகம், பட்டணம், புதுப்பாளையம், ராசிபுரம் உள்ளிட்ட பகுதிகளில், ஒரு மணி நேரத்திற்கு மேல் பெய்த மழையால் சாலையோரங்களில் மழைநீர் தேங்கி நின்றது. திடீரென பெய்த கோடை மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.