/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கட்டட பணிகளை தரமாக செய்ய கண்காணிப்பு அலுவலர் அறிவுரை
/
கட்டட பணிகளை தரமாக செய்ய கண்காணிப்பு அலுவலர் அறிவுரை
கட்டட பணிகளை தரமாக செய்ய கண்காணிப்பு அலுவலர் அறிவுரை
கட்டட பணிகளை தரமாக செய்ய கண்காணிப்பு அலுவலர் அறிவுரை
ADDED : ஆக 31, 2025 04:21 AM
நாமக்கல்:''அரசு கட்டட பணிகளை தரமாகவும், விரைவாகவும் செய்ய வேண்டும்,'' என, மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அறிவுரை கூறினார்.
நாமக்கல்
மாவட்டம், திருச்செங்கோடு, பரமத்தி, கபிலர்மலை
ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில், நேற்று மாவட்ட கண்காணிப்பு
அலுவலரும், சிறுபான்மையினர் நல ஆணையருமான ஆசியா மரியம் ஆய்வு
செய்தார். கலெக்டர் துர்கா மூர்த்தி உடனிருந்தார். திருச்செங்கோடு
நகராட்சி, 11 வார்டில், கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ்,
4.55 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய பஸ் ஸ்டாண்டை நவீன மயமாக்குதல்,
பஸ் ஸ்டாண்டிற்கு அருகே புதிய வணிக வளாகம் கட்டும் பணி, ஏ.இறையமங்கலம்
ஊராட்சி, நைனாம்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், 35.25
லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு
திட்டத்தின் கீழ், 2 புதிய வகுப்பறை கட்டடம் கட்டும் பணிகளை ஆய்வு
செய்தார்.
அப்போது, பணிகளை விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு
உத்தரவிட்டார். மேலும், நைனாம்பாளையத்தில் செயல்படும் அங்கன்வாடி
மையத்தில் ஆய்வு மேற்கொண்டு, குழந்தைகளுடன் கலந்துரையாடினார்.
மொளசி ஆரம்ப சுகாதார நிலையத்தில், 15வது நிதிக்குழு மானியத்தின் கீழ்,
50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நடந்து வரும் பொது சுகாதார அலகு
கட்டடத்தின் கட்டுமான பணி, பரமத்தி ஊராட்சி ஒன்றியம்,
வீரணாம்பாளையம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி
திட்டத்தின் கீழ், 5.36 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நாற்றங்கால் நடவு
செய்யப்பட்டு வருவதையும், கபிலர்மலை ஊராட்சி ஒன்றியம், கொந்தளம்
பகுதியில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ்
ஊனமுற்றோர்களுக்கு, தலா, 3.50 லட்சம் ரூபாய் வீதம், 1.12 கோடி ரூபாய்
மதிப்பீட்டில், 32 வீடுகள் கட்டப்பட்டு வருவதையும் ஆய்வு செய்தார்.
அப்போது,
கட்டுமான பணிகளை விரைவாகவும், தரமாகவும் முடிக்க வேண்டும் என
அறிவுறுத்தினார். தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் புவனேஷ்வரி,
கலெக்டரின் நேர்முக உதவியாளர் ராமச்சந்திரன் உள்பட பலர்
உடனிருந்தனர்.

