/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
வட்டார விவசாயிகளுக்கு இடுபொருள் மின்கல தெளிப்பான்கள் வழங்கல்
/
வட்டார விவசாயிகளுக்கு இடுபொருள் மின்கல தெளிப்பான்கள் வழங்கல்
வட்டார விவசாயிகளுக்கு இடுபொருள் மின்கல தெளிப்பான்கள் வழங்கல்
வட்டார விவசாயிகளுக்கு இடுபொருள் மின்கல தெளிப்பான்கள் வழங்கல்
ADDED : அக் 26, 2024 07:56 AM
நாமக்கல்: நாமக்கல் வட்டார வேளாண் துறை மூலம் செயல்படுத்தப்படும், 'மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்' திட்டம், அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் மற்றும் மத்-திய, மாநில அரசின் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்-றன. இந்த திட்டப்பணிகளை, வேளாண் கூடுதல் இயக்குனர் (ஆராய்ச்சி) அசோக்குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
'மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்' திட்டம் மூலம் வழங்கி-யுள்ள சணப்பை, பசுந்தாள் உர விதைகளை விதைத்துள்ள வயல்-களை ஆய்வு செய்து, விவசாயிகளிடம் கலந்துரையாடினார். வட்-டார விவசாயிகளுக்கு
இடுபொருட்கள் மற்றும் மின்கல தெளிப்-பான்கள் வழங்கினார். வட்டார ஒருங்கிணைந்த வேளாண் விரி-வாக்க மையத்தில் இடுபொருட்களின் இருப்பு விபரத்தை ஆய்வு செய்தார்.
மாவட்ட உயிரியல் கட்டுப்பாடு ஆய்வகம் மற்றும் மண் பரிசோ-தனை நிலையம் ஆகியவற்றை ஆய்வு செய்தார். மாவட்ட வேளாண் துணை இயக்குனர்கள் கவிதா, கோவிந்தசாமி, வட்டார வேளாண் உதவி இயக்குனர் சித்ரா,
வேளாண் அலுவலர்கள் மோகன், காஞ்சனா, மண் பரிசோதனை நிலைய மூத்த வேளாண் அலுவலர் கலைராணி உள்பட பலர் பங்கேற்றனர்.