/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மானிய விலையில் விவசாயிகளுக்கு மக்காச்சோளம் விதைகள் வழங்கல்
/
மானிய விலையில் விவசாயிகளுக்கு மக்காச்சோளம் விதைகள் வழங்கல்
மானிய விலையில் விவசாயிகளுக்கு மக்காச்சோளம் விதைகள் வழங்கல்
மானிய விலையில் விவசாயிகளுக்கு மக்காச்சோளம் விதைகள் வழங்கல்
ADDED : ஜூலை 30, 2025 01:30 AM
வெண்ணந்துார், வெண்ணந்துார் வேளாண்மை உதவி இயக்குனர் தனம் வெளியிட்டுள்ள அறிக்கை:
வெண்ணந்துார் வட்டாரத்தில், பரவலாக மக்காச்சோளம் சாகுபடி செய்கின்றனர். இது குறுகிய காலத்தில் அதிக லாபம் பெற உதவு கிறது. வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ், மக்காச்சோளம் செயல் விளக்க திடல் அமைக்கும் விவசாயிகளுக்கு, வீரிய ஒட்டு மக்காச்சோள விதை, உயிர் உரங்கள், இயற்கை இடுபொருட்கள், நானோ யூரியா போன்றவை மானிய விலையில் வழங்கப்பட்டு வருகிறது.
பொது பிரிவில், 85 விவசாயி கள், ஆதிதிராவிட, 10 விவசாயிகளுக்கு வழங்கப்பட உள்ளது. நில உடைமை சான்று, கணினி சிட்டா, ஆதார் அட்டை நகல், புகைப்படம் ஆகிய ஆவணங்களுடன், வேளாண்மை விரிவாக்க மையத்தை அணுகி மானிய விலையில் பெறலாம்.
இவ்வாறு கூறியுள்ளார்.