/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
குழந்தைகளுக்கு விளையாட்டு பொருட்கள் வழங்கல்
/
குழந்தைகளுக்கு விளையாட்டு பொருட்கள் வழங்கல்
ADDED : நவ 15, 2024 02:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குழந்தைகளுக்கு விளையாட்டு
பொருட்கள் வழங்கல்
சேந்தமங்கலம், நவ. 15-
சேந்தமங்கலம் அங்கன்வாடி மையத்தில், குழந்தைகள் தினத்தையொட்டி, விளையாட்டு பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
தேசிய குழந்தைகள் தினத்தையொட்டி, சேந்தமங்கலம் காமராஜபுரத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் படிக்கும் குழந்தைகளுக்கு, அப்துல்காலம் நண்பர்கள் குழு சார்பில், கல்வி உபகரணங்கள் மற்றும் விளையாட்டு பொருட்கள் வழங்கும் விழா நடந்தது. தலைமை ஆசிரியர் ரசிதாபானு தலைமை வகித்தார். குழந்தைகளுக்கான விளையாட்டு பொருட்களை ஒருங்கிணைப்பாளர் ராஜா, நிர்வாகிகன் சரவணன், அம்சவள்ளி உள்ளிட்டோர் வழங்கினர்.