/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கோழிகள் மேல் மூச்சுக்குழாய் அயற்சி நோயால் பாதிப்பு
/
கோழிகள் மேல் மூச்சுக்குழாய் அயற்சி நோயால் பாதிப்பு
கோழிகள் மேல் மூச்சுக்குழாய் அயற்சி நோயால் பாதிப்பு
கோழிகள் மேல் மூச்சுக்குழாய் அயற்சி நோயால் பாதிப்பு
ADDED : அக் 11, 2024 07:12 AM
நாமக்கல்: கோழியின நோய் ஆய்வகத்தில், பரிசோதிக்கப்பட்ட இறந்த கோழிகள் பெரும்பாலும் மேல் மூச்சுக்குழல் அயற்சி நோயால் பாதிக்கப்பட்டிருந்ததாக, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து, நாமக்கல் கால்நடை மருத்துவக்கல்லுாரி வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: கடந்த வார வானிலையை பொருத்த மட்டில், பகல், 89.6 டிகிரி இரவு, 71.6 டிகிரி என்ற அளவுகள் முறையே வெப்பம் காணப்பட்டது. அடுத்த ஐந்து நாட்களுக்கான வானிலையில், வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. பகலில், 89.6 டிகிரி இரவு நேர வெப்பம், 69.8 டிகிரியாக காணப்படும். காற்று தெற்கு திசையிலிருந்து மணிக்கு 10 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும்.
சிறப்பு ஆலோசனை: கடந்த வாரம் கோழியின நோய் ஆய்வகத்தில், இறந்த கோழிகளை பரிசோதனை செய்ததில், பெரும்பாலானவை மேல் மூச்சுக்குழல் அயற்சி நோயால் பாதிக்கப்பட்டு இறந்திருப்பது தெரியவந்தது. இந்நோயின் தாக்கத்தை குறைக்க, கோழிப் பண்ணைகளில் உயிர் பாதுகாப்பு முறைகளை பண்ணையாளர்கள் செய்திட வேண்டும். மேலும், மழைக்காலம் நெருங்கி வருவதால், கோழி கொட்டகை, தீவன ஆலைகளில் மழைநீர் கசியாதவாறு சரி செய்ய வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

