/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பட்டா மாறுதல் செய்து தராததால் அபராதம் வழங்கிய தாசில்தார்
/
பட்டா மாறுதல் செய்து தராததால் அபராதம் வழங்கிய தாசில்தார்
பட்டா மாறுதல் செய்து தராததால் அபராதம் வழங்கிய தாசில்தார்
பட்டா மாறுதல் செய்து தராததால் அபராதம் வழங்கிய தாசில்தார்
ADDED : ஜூலை 17, 2025 02:18 AM
சேந்தமங்கலம், பட்டா மாறுதல் செய்து தராததால், மாநில தலைமை தகவல் ஆணையர் உத்தரவுப்படி தாசில்தார், 25,000 ரூபாய் அபராதம் வழங்கினார்.
சேந்தமங்கலம், துாசூர் கணவாய்பட்டியை சேர்ந்தவர் சசிக்குமார், 43; இவர், மின்வாரியத்தில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வருகிறார். இவரது தந்தை பெயரில் இருந்த பட்டாவை, 2015ல் தான செட்டில்மென்ட் செய்து பத்திரப்பதிவு செய்து கொண்டார். தொடர்ந்து, 2018ல் பட்டா பெயர் மாற்றம் கோரி சேந்தமங்கலம் தாசில்தாருக்கு ரிஜிஸ்டர் தபாலில் அனுப்பி இருந்தார். இதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்காததால், மனுதாரர் சசிக்குமார் மாநில தகவல் ஆணையத்தை அணுகியிருந்தார்.
தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம், பட்டா மாறுதல் தொடர்பாக கோரிய தகவல்களை வழங்காத சேந்தமங்கலம் தாசில்தாருக்கு, 25,000 ரூபாய் அபராதம், மனுதாரருக்கு பட்டா மாறுதல் செய்து தரவேண்டும் என, மாநில தலைமை தகவல் ஆணையர் முகம்மது ஷகீல் அதர் உத்தரவு பிறப்பித்தார். அதன்படி, நேற்று மாலை சேந்தமங்கலம் தாலுகா அலுவலகத்திற்கு வந்த மனுதாரர் சசிக்குமாரிடம், 25,000 ரூபாய் அபராதம், அவருடைய பெயருக்கு பட்டா மாறுதல் செய்த பத்திரமும், பொது தகவல் அலுவலர் கோமதி வழங்கினார்.

