/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
/
தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
ADDED : டிச 21, 2024 01:16 AM
நாமக்கல், டிச. 21-
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நாமக்கல்லில் தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட செயலாளர் சிவக்குமார் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் வீராசாமி கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். இதில், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். சத்துணவு அமைப்பாளர்களுக்கு பணிமூப்பு அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டும். அரசு துறைகளில் 40 சதவீதத்திற்கும் மேல் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். மாவட்ட நிர்வாகிகள் பிரபுகுமார், அழகுகுமார், வரதராஜன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

