/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கடன் வாங்கி அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கும் தமிழ்நாடு; பா.ஜ., குற்றச்சாட்டு
/
கடன் வாங்கி அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கும் தமிழ்நாடு; பா.ஜ., குற்றச்சாட்டு
கடன் வாங்கி அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கும் தமிழ்நாடு; பா.ஜ., குற்றச்சாட்டு
கடன் வாங்கி அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கும் தமிழ்நாடு; பா.ஜ., குற்றச்சாட்டு
ADDED : செப் 26, 2025 02:19 AM
ராசிபுரம், ''கடன் வாங்கி, அரசு ஊழியர்களுக்கு தமிழக அரசு சம்பளம் வழங்குகிறது,'' என, பா.ஜ., மாநில துணைத்தலைவர் ராமலிங்கம் கூறினார்.
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் கோனேரிப்பட்டியில், பா.ஜ., மாநில துணைத்லைவர் ராமலிங்கம் இல்லத்தில், கட்சியின் நிறுவன தலைவர் தீனதயாள் உபாத்யாய் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. அவரது படத்துக்கு, ராமலிங்கம் மாலை அணிவித்து மலர் துாவி மரியாதை செலுத்தினார். பின்னர், நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
நிதி நிர்வாகத்தில் தமிழ்நாடு பின் தங்கிய மாநிலமாக உள்ளது. வருவாய் பற்றாக்குறையால் தமிழ்நாடு, 27ம் இடத்திற்கு சென்றுவிட்டது. தமிழக அரசு கடன் வாங்கி ஊழியர்களுக்கு சம்பளம் கொடுத்து வருகிறது. கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த போதுமான நிதி ஒதுக்கவில்லை.
ஒரு காலத்தில் பின்தங்கிய மாநிலமாக கருதப்பட்ட உத்தரபிரதேசம் கூட வருவாய் உபரியில், 37,000 கோடி ரூபாய் ஒதுக்கி முதலிடம் பிடித்துள்ளது. தமிழ்நாட்டின் பொருளாதார நிலையை சரி செய்யும் பணிகளை முதல்வர் செய்ய வேண்டும்.
மக்கள் நலனுக்காக ஜி.எஸ்.டி., குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒட்டுமொத்த மக்கள் பயனடைந்துள்ளனர். ஆனால், பாலுக்கு ஜி.எஸ்.டி.,யில் விலக்கு அளிக்கப்பட்டுள்ள நிலையில் கூட, இன்று வரை அதே விலைக்கு தான் விற்று வருகின்றனர்.
தி.மு.க.,விற்கு மறைமுகமாக விஜய் ஆதரவளிக்கிறார். நிறைய முதலீடு வாங்கி வருவதாக, வெளிநாடு சென்ற தமிழக முதல்வர் முதலீடுகளை வாங்கி வரவில்லை. அவர் புதிதாக டோப்பா முடி வாங்கி வந்துள்ளார்.
இவ்வாறு கூறினார்.