/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ஓரணியில் தமிழகம்' கொள்கை விளக்க கூட்டம்
/
ஓரணியில் தமிழகம்' கொள்கை விளக்க கூட்டம்
ADDED : ஜூலை 03, 2025 01:43 AM
நாமக்கல், நாமக்கல்லில் கிழக்கு மாவட்ட, தி.மு.க., சார்பில், ஓரணியில் தமிழ்நாடு கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நேற்று நடந்தது. அமைச்சர் மதிவேந்தன், எம்.எல்.ஏ., ராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளரும், எம்.பி.,யுமான ராஜேஸ்குமார் தலைமை வகித்து பேசியதாவது:
ஓரணியில் தமிழ்நாடு என்ற இயக்கத்தை, முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். பா.ஜ,, அரசால் தமிழ் மொழிக்கும், இந்த மண்ணுக்கும் எதிர்காலத்தில் வர இருக்கும் ஆபத்தை தடுக்கத்தான், தமிழக முதல்வர் இந்த இயக்கத்தை தொடங்கி வைத்துள்ளார்.
நாமக்கல் மாவட்டத்தில், ஓரணியில் தமிழ்நாடு என்ற கொள்கை முழக்கத்தை, தி.மு.க.,வினர் வீடு, வீடாக சென்று மக்கள் மத்தியில் விளக்க உள்ளனர். மேலும், இந்த மக்கள் இயக்கத்தின் மூலம், நான்கு ஆண்டுகளில், திராவிட மாடல் செய்த சாதனைகைள மக்களிடம் விளக்க உள்ளனர்.
இவ்வாறு அவர் பேசினார்.