sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

டேங்கர் லாரி உரிமையாளர்கள் 'ஸ்டிரைக்': காஸ் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

/

டேங்கர் லாரி உரிமையாளர்கள் 'ஸ்டிரைக்': காஸ் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

டேங்கர் லாரி உரிமையாளர்கள் 'ஸ்டிரைக்': காஸ் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

டேங்கர் லாரி உரிமையாளர்கள் 'ஸ்டிரைக்': காஸ் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்


ADDED : ஜன 04, 2024 11:38 AM

Google News

ADDED : ஜன 04, 2024 11:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: டேங்கர் லாரிகளில், 'கிளீனர் கட்டாயம் இருக்க வேண்டும்' என, அதிகாரிகள் கெடுபிடி காட்டுவதால், டேங்கர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதேநிலை நீடித்தால், கோவை, ஈரோடு பகுதிகளில், காஸ் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.

தென்மண்டல பல்க் எல்.பி.ஜி., டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம், நாமக்கல்லை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இச்சங்கத்தில், 5,500 டேங்கர் லாரிகள் உள்ளன. இந்த டேங்கர் லாரிகள், மத்திய அரசுக்கு சொந்தமான ஆயில் நிறுவனங்களின் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து, திரவ வடிவிலான சமையல் காஸ் சிலிண்டரில் நிரப்பும் பாட்லிங் பிளாண்டுக்கு கொண்டு செல்ல கான்ட்ராக்ட் அடிப்படையில் இயக்கப்படுகிறது.

இந்நிலையில், 'டேங்கர் லாரிகளில் கிளீனர் கட்டாயம் இருந்தால் மட்டுமே லோடு ஏற்றுவோம்' என, மங்களூரு சுத்திகரிப்பு நிலைய ஆயில் நிறுவன அதிகாரிகள் கறாராக தெரிவித்தனர். இதனால், அந்த அதிகாரிகளை கண்டித்து, டேங்கர் லாரி உரிமையாளர்கள், கடந்த, 1 முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து, தென்மண்டல பல்க் எல்.பி.ஜி., டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் சுந்தர்ராஜன் கூறியதாவது:-

மற்ற சுத்திகரிப்பு நிலையங்களை போல, மங்களூருவிலும் கிளீனர் இல்லாமல் லோடுகளை ஏற்ற அதிகாரிகள் முன்வர வேண்டும். எங்களின் போராட்டம் காரணமாக, கேரளா மாநிலத்தில் பாலக்காடு உள்ளிட்ட சில பிளாண்டுகளுக்கும், தமிழகத்தில் கோவை, ஈரோடு பிளாண்டுகளுக்கும், சமையல் காஸ் வருவது தடைப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

அதிகாரிகளின் கெடுபிடி காரணமாக, டேங்கர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டம் நீடிக்கும் பட்சத்தில், காஸ் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.






      Dinamalar
      Follow us