/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பறித்து போடப்பட்ட தார்ச்சாலை: தழும்பி கொட்டும் பாலால் அவதி
/
பறித்து போடப்பட்ட தார்ச்சாலை: தழும்பி கொட்டும் பாலால் அவதி
பறித்து போடப்பட்ட தார்ச்சாலை: தழும்பி கொட்டும் பாலால் அவதி
பறித்து போடப்பட்ட தார்ச்சாலை: தழும்பி கொட்டும் பாலால் அவதி
ADDED : ஜூலை 22, 2025 01:46 AM
நாமகிரிப்பேட்டை, நாமகிரிப்பேட்டை அடுத்த மூலப்பள்ளிப்பட்டி பஞ்.,ல் பறித்து போடப்பட்ட சாலை சீரமைக்காததால், பால் வியாபாரிகள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.
நாமகிரிப்பேட்டை யூனியன், மூலப்பள்ளிப்பட்டி அரசு நடுநிலைப்பள்ளியில் இருந்து
பசிறுமலை அடிவாரம் வரை அமைக்கப்பட்டிருந்த தார்ச்சாலை, நீண்ட நாட்களானதால் குண்டும், குழியுமாக காணப்பட்டது. இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். கடந்த மே மாதம், 80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய தார்ச்சாலை அமைக்க, அமைச்சர் மதிவேந்தன் பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார். இரண்டு மாதமாக பணியை தொடங்காத ஒப்பந்ததாரர், கடந்த வாரம், பொக்லைன் மூலம் சாலையை பறித்து போட்டுள்ளார். இதனால் சாலை முழுவதும் ஜல்லிக்கற்கள் மட்டுமே உள்ளன.
இதனால், அந்த சாலையில் வாகன ஓட்டிகள் செல்ல முடியாமல் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். நடந்தே செல்ல முடியாத இந்த சாலையில், பால் வியாபாரிகள் பால் கொண்டு செல்லும்போது, பாதிக்குமேல் தழும்பி கீழே கொட்டி விடுகிறது. மேலும், பள்ளி வேன்கள் உள்ளே வராமல் மாணவ, மாணவியர் அவதிப்பட்டு வருகின்றனர். ஒரு கிலோ மீட்டர் துாரத்திற்கு இந்த நிலைமை தான் உள்ளது. இந்த சாலையை விரைந்து சீரமைத்து தரவேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.