/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கற்றல், கற்பித்தல் பணியை உபகரணங்களுடன் கற்பிக்க ஆசிரியர்களுக்கு அறிவுரை: டி.இ.ஓ.,
/
கற்றல், கற்பித்தல் பணியை உபகரணங்களுடன் கற்பிக்க ஆசிரியர்களுக்கு அறிவுரை: டி.இ.ஓ.,
கற்றல், கற்பித்தல் பணியை உபகரணங்களுடன் கற்பிக்க ஆசிரியர்களுக்கு அறிவுரை: டி.இ.ஓ.,
கற்றல், கற்பித்தல் பணியை உபகரணங்களுடன் கற்பிக்க ஆசிரியர்களுக்கு அறிவுரை: டி.இ.ஓ.,
ADDED : ஜூலை 12, 2025 01:43 AM
நாமக்கல் :''ஆசிரியர்கள் அனைவரும் கற்றல், கற்பித்தல் பணியை தகுந்த உபகரணங்களுடன் திறம்பட மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டும்,'' என, ஆலோசனை கூட்டத்தில், தனியார் பள்ளிகளின் மாவட்ட கல்வி அலுவலர் ஜோதி பேசினார்.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தனியார் மெட்ரிக், சுயநிதி, சி.பி.எஸ்.இ., பள்ளி முதல்வர்களுக்கான ஆலோசனை கூட்டம், காவேட்டிப்பட்டியில் நடந்தது. மாவட்ட கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்) ஜோதி தலைமை வகித்து பேசியதாவது: பள்ளிகளில் செயல்படும் மாணவ, மாணவியர் விடுதிகள், கலெக்டர் அனுமதி பெற்ற பின் செயல்பட வேண்டும். மாணவர் சேர்க்கை பதிவேடு, மாற்று சான்றிதழ் வழங்கும் பதிவேடு, மதிப்பெண் பட்டியல் வழங்கும் பதிவேடு, தமிழக அரசின் நிலையில்லா நலத்திட்ட பொருட்கள் வழங்கும் விபர பதிவேடு, இருப்பு பதிவேடு, இதர பதிவேடுகளை முறையாக பராமரிக்கவேண்டும்.கடலுாரில் நடந்த பள்ளி வாகன விபத்துபோல், மீண்டும் நடக்காமல் இருக்க, பள்ளி வாகனங்களில் பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பள்ளி வாகனங்களில் கட்டாயம் உதவியாளர் நியமிக்க வேண்டும்.
தகுதி சான்று புதுப்பிக்கப்பட்டுள்ளதா என்பதை, பள்ளி முதல்வர் ஆய்வு செய்ய வேண்டும். டிரைவர்கள் அனைவரும், ஆண்டுக்கு ஒரு முறை, கட்டாயம் மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும். ஆசிரியர்கள் அனைவரும் கற்றல் கற்பித்தல் பணியை, தகுந்த உபகரணங்களுடன் திறம்பட மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டும். அவ்வாறு கற்பிக்கும்போதுதான், மாணவருடைய கல்வி தரம் உயரம்.இவ்வாறு அவர் பேசினார்.
தனியார் பள்ளிகள் மாவட்ட கல்வி அலுவலக கண்காணிப்பாளர் விவேக், உதவியாளர் கோகுலநாதன், தனியார் பள்ளி முதல்வர்கள், தலைமையாசிரியர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.