/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
தொழிலாளர்களுக்கு ஆதரவாக ஆசிரியர் கூட்டணி ஆர்ப்பாட்டம்
/
தொழிலாளர்களுக்கு ஆதரவாக ஆசிரியர் கூட்டணி ஆர்ப்பாட்டம்
தொழிலாளர்களுக்கு ஆதரவாக ஆசிரியர் கூட்டணி ஆர்ப்பாட்டம்
தொழிலாளர்களுக்கு ஆதரவாக ஆசிரியர் கூட்டணி ஆர்ப்பாட்டம்
ADDED : அக் 10, 2024 02:00 AM
தொழிலாளர்களுக்கு ஆதரவாக
ஆசிரியர் கூட்டணி ஆர்ப்பாட்டம்
நாமக்கல், அக். 10-
சென்னையில் போராடும், 'சாம்சங்' தொழிற்சாலை தொழிலாளர்களுக்கு ஆதரவாக, நேற்று நாமக்கல் பூங்கா சாலையில், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. மாவட்ட தலைவர் மாதேஸ் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் கலைச்செல்வன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் முருகேசன், அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு தலைவர் இளவேந்தன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில், 'சாம்சங்' தொழிலாளர்களுக்கு தொழிற்சங்கம் அமைக்கும் உரிமையை வழங்க வேண்டும். பணிபாதுகாப்பு மற்றும் 8 மணி நேர வேலை உத்தரவாதம் அளிக்க வேண்டும். ஊதிய உயர்வு உள்ளிட்ட சலுகைகளை வழங்குவது தொடர்பாக பெரும்பான்மை சங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். வட்டார செயலாளர் முருகேசன் உள்பட பலர் பங்கேற்றனர்.