/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பி.ஜி.பி., கல்வி நிறுவனத்தில் ஆசிரியர் தினம் கொண்டாட்டம்
/
பி.ஜி.பி., கல்வி நிறுவனத்தில் ஆசிரியர் தினம் கொண்டாட்டம்
பி.ஜி.பி., கல்வி நிறுவனத்தில் ஆசிரியர் தினம் கொண்டாட்டம்
பி.ஜி.பி., கல்வி நிறுவனத்தில் ஆசிரியர் தினம் கொண்டாட்டம்
ADDED : செப் 06, 2025 01:29 AM
நாமக்கல், :நாமக்கல் பி.ஜி.பி., கல்வி நிறுவனங்கள் சார்பில், நேற்று ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது. பி.ஜி.பி., கல்வி நிறுவனங்களின் சேர்மன் டாக்டர் பழனி ஜி பெரியசாமி தலைமை வகித்தார்.
அவர், ஆசிரியர்களின் சிறப்புகள் குறித்தும், சமுதாயத்தில் ஆசிரியர்களின் பங்களிப்பு குறித்தும் பேசினார். கல்வி நிறுவனங்களின் தாளாளர் கணபதி, டீன் பெரியசாமி ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். அனைத்து பி.ஜி.பி., கல்வி நிறுவனங்களின் முதல்வர்கள், பேராசிரியர்கள் விழாவை சிறப்பித்தனர்.
ஆசிரியர் தின விழாவின் ஒரு பகுதியாக, கல்லுாரி ஆசிரியர்களுக்கு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசு வழங்கப்பட்டது. இறுதியில் கல்வியியல் கல்லுாரி முதல்வர் திலகராணி நன்றி தெரிவித்தார்.