/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆசிரியர்கள் சார்பில் உதவி வழங்கல்
/
புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆசிரியர்கள் சார்பில் உதவி வழங்கல்
புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆசிரியர்கள் சார்பில் உதவி வழங்கல்
புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆசிரியர்கள் சார்பில் உதவி வழங்கல்
ADDED : டிச 06, 2024 07:35 AM
நாமக்கல்: பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, நாமக்கல் ஆசிரியர்கள் சார்பில், 1 லட்சம் ரூபாய் மதிப்பிலான நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன.
தமிழகத்தை புரட்டி போட்ட பெஞ்சல் புயலால் கடலுார், திருவண்ணாமலை, விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்காக தமிழக மக்கள், பல்வேறு பகுதியில் இருந்து வெள்ள நிவாரண பொருட்களை, அந்தந்த மாவட்ட நிர்வாகம் மூலம் அனுப்பி வைக்கின்றனர்.
அந்த வகையில், நாமக்கல் அடுத்த புதுசத்திரம் வட்டார தொடக்க நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் வட்டார கல்வி அலுவலர்கள் சார்பில், நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி கலையரங்கில் அமைக்கப்பட்டுள்ள முகாமில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் சந்திரசேகரனிடம், 1 லட்சம் ரூபாய் மதிப்பிலான அரிசி, மளிகை என நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது. புதுச்சத்திரம் வட்டார கல்வி அலுவலர் சுப்பிரமணியன் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
வணிகர்கள் வழங்கிய நிவாரணம்:
பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக, நாமக்கல் மாவட்ட வணிகர் சங்கம் சார்பில், இரண்டு லட்சம் ரூபாய் மதிப்புள்ள நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன. காய்கறி, மளிகை பொருட்கள், ரொட்டி, பால் பவுடர், போர்வை உள்ளிட்ட நிவாரண பொருட்களை, மாவட்ட போலீஸ் துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் நேற்று வழங்கினர். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின், நாமக்கல் மாவட்ட தலைவர் ஜெயகுமார் வெள்ளையன், செயலாளர் பொன்.வீரக்குமார் மற்றும் பொருளாளர் சீனிவாசன் ஆகியோர் கலந்துகொண்டனர்.