/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ஆசிரியர் காலனியில் 'லைட்' இல்லாமல் அவதி
/
ஆசிரியர் காலனியில் 'லைட்' இல்லாமல் அவதி
ADDED : ஜூலை 12, 2025 01:25 AM
பள்ளிப்பாளையம், பள்ளிப்பாளையம் அருகே, ஆலாம்பாளையம் அடுத்த ஆசிரியர் காலனியில் இருந்து புதுப்பாளையம் செல்லும் சாலையில், தினமும் ஏராளமானோர் சென்று வருகின்றனர். இந்த சாலையில் தேவையான இடத்தில் மின்விளக்கு வசதி இல்லாததால், இரவில் நடந்தும், டூவீலர்களில் செல்வோர் அச்சத்துடனேயே கடந்து செல்கின்றனர்.
காட்டுப்பகுதியாக உள்ளதால், இரவில் விஷ ஜந்துக்கள் நடமாட்டத்தால், பொதுமக்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. இதனால் இரவில் செல்லவே மக்கள் அச்சத்துக்குள்ளாகின்றனர். எனவே, இந்த சாலையில் போதுமானளவு மின்விளக்கு வசதி ஏற்படுத்தி தர, பள்ளிப்பாளையம் யூனியன் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.