தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ பட்டு விவசாயிகளுக்கு தொழில்நுட்ப பயிற்சி

பட்டு விவசாயிகளுக்கு தொழில்நுட்ப பயிற்சி

பட்டு விவசாயிகளுக்கு தொழில்நுட்ப பயிற்சி


ADDED : ஆக 27, 2026 03:07 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 27, 2026 03:07 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ராசிபுரம்: ராசிபுரம் அருகே, மத்திய பட்டு வாரியம் சார்பில், பட்டுப்புழு வளர்ப்பு மேலாண்மை மற்றும் பூச்சி கட்டுப்பாடு குறித்த விழிப்-புணர்வு செயல்விளக்க முகாம் நடந்தது.

புதுச்சத்திரம் மற்றும் தாத்தயங்கார்பட்டி கிராமங்களில், 'என் பட்டு, என் பெருமை-2.0' திட்டத்தின் கீழ் பட்டு விவசாயிகளுக்-கான விழிப்புணர்வு மற்றும் தொழில்நுட்ப செயல்விளக்க முகாம் நடந்தது. மத்திய பட்டு வாரியத்தின், ஓசூர் மரபணு வளங்கள் பாதுகாப்பு மைய விஞ்ஞானி ஹிருதயா தலைமை வகித்தார். நாமக்கல் பட்டு வளர்ச்சி விரிவாக்க மைய களப்பணியாளர்கள் கோகிலா, கிருத்திகா, சத்யா, கீதா, ஞானபிரபா மற்றும் கொல்லி-மலை பட்டு வளர்ச்சி உதவி ஆய்வாளர் தேன்மொழி ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.முகாமில், கோடை காலம் மற்றும் பருவமழை காலங்களில் பட்-டுப்புழு வளர்ப்பு முறைகளை எவ்வாறு கையாள்வது என்பது குறித்த தொழில்நுட்ப பயிற்சியளிக்கப்பட்டது.

இதில், ஓசூர் பட்டு விதை உற்பத்தி மைய விஞ்ஞானி பாலச்சந்-திரன் பங்கேற்று, ''பட்டுப்புழு வளர்ப்பு கூடங்களில் தட்ப வெப்-பநிலை மற்றும் ஈரப்பதத்தை சரியான அளவில் பராமரிப்பது அவசியம். கிருமி நாசினிகளை சரியான முறையில் பயன்படுத்து-வது, படுக்கை மேலாண்மை மற்றும் புழுக்கள் தோல் உரிக்கும் காலங்களில் விவசாயிகள் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள் பட்டுக்கூடு உற்பத்தியை அதிகரிக்கும்,'' என்றார்.

தொடர்ந்து, மல்பெரி தோட்டத்தில் பயிர்களை தாக்கும் திரிப்ஸ் பூச்சிகளை கட்டுப்படுத்துவது குறித்து சேலம் மண்டல பட்டு வளர்ப்பு ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானி பவித்ரன் விவசாயிக-ளுக்கு நேரடி செயல்விளக்கம் அளித்தார்.

அப்போது, மல்பெரி செடிகளில் திரிப்ஸ் பூச்சி தாக்குதலின் ஆரம்-பகட்ட அறிகுறிகளை கண்டறிவது, உயிரியல் காரணிகளை பயன்-படுத்தி ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை முறையில் பூச்சி-களை கட்டுப்படுத்துவது மற்றும் ரசாயன பூச்சிக்கொல்லி மருந்-துகள் பயன்பாட்டை குறைத்து இயற்கை வழியில் மல்பெரி இலையின் தரத்தை உயர்த்துவது குறித்து

பயிற்சியளித்தார்.

இப்பயிற்சி முகாமில், புதுச்சத்திரம், தாத்தையங்கார்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பட்டு விவசாயிகள் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us