/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
சுற்றுலா பயணிக்கு கத்திக்குத்து; வாலிபர் கைது
/
சுற்றுலா பயணிக்கு கத்திக்குத்து; வாலிபர் கைது
ADDED : ஆக 15, 2025 02:41 AM
சேந்தமங்கலம், கொல்லிமலையில், சுற்றுலா பயணியை கத்தியால் குத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
திருச்சி மாவட்டத்தை சேர்ந்த மனோகர், 40, தனது நண்பர்கள், 14 பேருடன் சேர்ந்து மொத்தம், 8 டூவீலர்களில் கடந்த, 9ம் தேதி கொல்லிமலைக்கு சுற்றுலா வந்துள்ளனர். செம்மேடு பகுதியில் இருந்து சர்க்கரைப்பட்டி கிராமத்திற்கு செல்லும் வழியில் உள்ள, ஒரு பாலத்தில் அவர்கள் அனைவரும் அமர்ந்து மது அருந்தினர்.
அப்போது அந்த வழியாக வந்த, கீழ் சோளக்காடு பகுதியை சேர்ந்த அஜித் மற்றும் அவரது நண்பர்கள் இருவர், மது அருந்தி கொண்டிருந்த மனோகரிடம் இந்த வழியில் பெண்கள் வருவர். இங்கு மது அருந்தக்கூடாது என்று கூறியுள்ளனர்.இதனால் அவர்களுக்கும், சுற்றுலா பயணிகளுக்கும் வாக்குவாதம் முற்றியது. இதில் ஆத்திரமடைந்த அஜித், மனோகரை கத்தியால் குத்தியுள்ளார். மேலும் அஜித்தின் நண்பர்கள் மனோகரின் நண்பர்களையும் தாக்கியுள்ளனர். காயமடைந்த நண்பர்களை மீட்டு, நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வாழவந்தி நாடு போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்தனர்.
இதுன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிந்து அஜித்தை கைது செய்தனர். தப்பியோடிய அவரது நண்பர்கள் இருவரை தேடி வருகின்றனர்.