/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கோவில் குதிரை உயிரிழப்பு; எலந்தகுட்டை மக்கள் சோகம்
/
கோவில் குதிரை உயிரிழப்பு; எலந்தகுட்டை மக்கள் சோகம்
கோவில் குதிரை உயிரிழப்பு; எலந்தகுட்டை மக்கள் சோகம்
கோவில் குதிரை உயிரிழப்பு; எலந்தகுட்டை மக்கள் சோகம்
ADDED : ஆக 03, 2024 06:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் அருகே, எலந்தகுட்டை பகுதியில் பிரசத்தி பெற்ற ஸ்ரீ பொன்காளியம்மன் கோவில் உள்ளது.
இக்கோவிலில் கடந்த, 25 ஆண்டுகளாக குதிரை ஒன்று வளர்க்கப்பட்டு வந்தது. திருவிழா சமயத்தில் சாமி அழைத்து வரும்போது, குதிரையும் உடன் வரும். மேலும் அப்பகுதி மக்கள் குதிரையிடம் வாக்கு கேட்டும் வந்தனர். சில மாதங்களாக குதிரைக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று காலை, குதிரை உயிரிழந்தது. அப்பகுதி மக்கள், குதிரைக்கு மாலை அணிவித்து, பூஜை செய்து நல்லடக்கம் செய்தனர்.