/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மக்களின் எதிர்ப்பை மீறி 6 கி.மீ., துாரத்துக்கு குழாய் அமைப்பு போலீஸ், அதிரடிப்படை குவிப்பால் கொங்கர்பாளையத்தில் பதற்றம்
/
மக்களின் எதிர்ப்பை மீறி 6 கி.மீ., துாரத்துக்கு குழாய் அமைப்பு போலீஸ், அதிரடிப்படை குவிப்பால் கொங்கர்பாளையத்தில் பதற்றம்
மக்களின் எதிர்ப்பை மீறி 6 கி.மீ., துாரத்துக்கு குழாய் அமைப்பு போலீஸ், அதிரடிப்படை குவிப்பால் கொங்கர்பாளையத்தில் பதற்றம்
மக்களின் எதிர்ப்பை மீறி 6 கி.மீ., துாரத்துக்கு குழாய் அமைப்பு போலீஸ், அதிரடிப்படை குவிப்பால் கொங்கர்பாளையத்தில் பதற்றம்
ADDED : ஜன 31, 2025 01:26 AM
மக்களின் எதிர்ப்பை மீறி 6 கி.மீ., துாரத்துக்கு குழாய் அமைப்பு போலீஸ், அதிரடிப்படை குவிப்பால் கொங்கர்பாளையத்தில் பதற்றம்
டி.என்.பாளையம்:டி.என்.பாளையம் அணை அருகில் இருந்து, தனியார் நிலத்துக்கு தண்ணீர் கொண்டு செல்ல, ௬ கி.மீ., துாரத்துக்கு குழாய் அமைக்கும் பணி, ௧௦க்கும் மேற்பட்ட கிராம மக்களின் கடும் எதிர்ப்பை மீறி, நீதிமன்ற உத்தரவுப்படி நடந்தது.
டி.என்.பாளையம் அருகேயுள்ள குண்டேரிப்பள்ளம் அணை அருகில், 2018ல் விவசாய நிலத்தில் ஆழ்குழாய் கிணறு அமைத்து, 6 கி.மீ., தொலைவில் ஆறு விவசாயிகளுக்கு சொந்தமான, 50 ஏக்கர் விவசாய நிலத்துக்கு குழாய் மூலம் தண்ணீர் கொண்டு செல்ல முயன்றனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியை சேர்ந்த, 10 கிராம மக்கள் போராடினர். இதனால் விவசாயிகள் தரப்பில் நீதிமன்றம் சென்றனர். இரு ஆண்டுகளுக்கு முன் நீதிமன்ற உத்தரவு பெற்று குழாய் அமைக்கவும் முயன்றனர். இதுவும் கிராம மக்களின் தொடர் போராட்டத்தால் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இந்நிலையில் மீண்டும் உயர் நீதிமன்றத்தில் உத்தரவு பெற்று, போலீஸ் பாதுகாப்புடன் குழாய் அமைக்கும் பணியில், விவசாயிகள் நேற்று ஈடுபட்டனர்.
இதையறிந்து, 200க்கும் மேற்பட்ட கொங்கர்பாளையம் கிராம மக்கள், நேற்று முன்தினம் மாலையே, கோபி தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டனர். உயர் நீதிமன்ற உத்தரவுப்படி குழாய்கள் அமைக்காமல், 10-க்கும் மேற்பட்ட விதிகளை மீறி, தனியார் தரப்பில் குழாய் அமைக்கின்றனர் என்று குற்றஞ்சாட்டினர்.
கலெக்டர் மற்றும் கோபி வருவாய் துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இடத்தில் ஆய்வு செய்த பிறகே, குழாய் அமைக்கும் பணியை தொடங்க வேண்டும் என்று கூறி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தாலுகா அலுவலக வளாகத்தில் இரவில் சமைத்தும், துாங்கியும் போராட்டத்தை தொடர்ந்தனர். இரண்டாவது நாளாக நேற்றும் போராட்டத்தை தொடர்ந்தனர்.
அதேசமயம் கொங்கர்பாளையம் ஊராட்சியில் வினோபாநகர், கோவிலுார், தோப்பூர், வாணிப்புத்துார் உள்ளிட்ட கிராமங்களில், 10-க்கும் மேற்பட்ட இடங்களில் தடுப்புகளை ஏற்படுத்தி, கிராமத்தில் உள்ள பிறரை வெளியேறாமல் போலீசார் தடுத்தனர். குண்டேரிப்பள்ளம் அணை பகுதியில் இரண்டு கூடுதல் டி.எஸ்.பி.,க்கள் தலைமையில் ரிசர்வ் போலீசார் உட்பட, 300-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். கிராம மக்களின் எதிர்ப்பை மீறி, ஏழு ஜே.சி.பி., இயந்திரங்கள் மூலமாக குழாய் அமைக்கும் பணி தொடங்கியது.
முன்னதாக குழாய் அமைக்க எதிர்ப்பு தெரிவித்த, ௧8 பெண்களை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்து கொண்டு சென்றனர்.
வாணிப்புத்துார், கொங்கர்பாளையம், குண்டேரிப்பள்ளம் உள்ளிட்ட பகுதிகளில் நுாற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டதால், காலை முதல் மாலை வரை கொங்கர்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் பதற்றம் நிலவியது.
நீதிமன்ற உத்தரவின்படி மாலை வரை குழாய் அமைக்கும் பணி நடக்கும். முடிவடையாத பணி அடுத்த நாள் நடக்கும். குழாய் அமைக்கும் பணி முழுமையாக நடக்கும் என்று போலீசார் தெரிவித்தனர்.
வாக்குவாதம்-தள்ளுமுள்ளுவிளாங்கோம்பை செக்போஸ்ட்டில் இருந்து எஸ்.டி.,காலனி செல்லும் சாலை வழியாக இயந்திரம் மூலம் அடுத்தடுத்து குழி தோண்டப்பட்டு வந்தபோது, தாசில்தார் சரவணன் உட்பட வருவாய் துறை மற்றும் போலீஸ் அதிகாரிகளுடன், அப்பகுதியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது இரு தரப்பினருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. சிறிது நேரம் கழித்து பேச்சுவார்த்தையை தொடர்ந்து குழாய் அமைக்கும் பணி
தொடர்ந்தது.

