/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
3,105 ஊரக உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளின் பதவிக்காலம் முடிவு
/
3,105 ஊரக உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளின் பதவிக்காலம் முடிவு
3,105 ஊரக உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளின் பதவிக்காலம் முடிவு
3,105 ஊரக உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளின் பதவிக்காலம் முடிவு
ADDED : ஜன 06, 2025 02:06 AM
நாமக்கல்: தமிழகம் முழுவதும், 2019ல் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடந்தது. நாமக்கல் மாவட்டத்தில், 15 ஒன்றியங்கள், 322 கிராம பஞ்.,களுக்கு இத்தேர்தல் நடந்தது. இதன் மூலம், 17 மாவட்ட பஞ்., கவுன்சிலர்கள், 172 ஒன்றிய கவுன்சிலர்கள், 322 கிராம பஞ்., தலைவர்கள், 2,594 வார்டு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்கள், 2019 ஜன., 5ல், பொறுப்பேற்றனர். இவர்களின் பதவிக்காலம் நேற்றுடன் முடிவடைந்தது. அதன்படி, நாமக்கல் மாவட்டத்தில், 3,105 ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் முடிவ-டைந்துள்ளது.
இதேபோல், மாவட்ட பஞ்., தலைவர், ஒன்றியக்குழு தலை-வர்கள், துணைத்தலைவர்கள் பதவிக்காலமும், நேற்றுடன் முடிந்-தது. 'இவர்களின் பொறுப்புகள், தனி அலுவலர்கள் வசம் ஒப்ப-டைக்கப்படும்' என, அதிகாரிகள் தெரிவித்தனர்.