/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
தி.மு.க., மாணவர் அணி சார்பில் துண்டு பிரசாரம்
/
தி.மு.க., மாணவர் அணி சார்பில் துண்டு பிரசாரம்
ADDED : ஏப் 23, 2025 01:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ப.வேலுார்,:-பா.ஜ.,வுடன் கூட்டணி வைத்துக் கொண்டு, அ.தி.மு.க., நடத்தும் அரசியல் நாடகத்தை கண்டித்து, தி.மு.க., மாணவர் அணியினர் ப.வேலுாரில் பிரசாரம் செய்தனர். பஸ் நிலையத்தில் தொடங்கிய பிரசாரம், முக்கிய வீதிகள் வழியாக நான்கு ரோடு வரை சென்று முடிவடைந்தது. தி.மு.க., நகர செயலாளர் முருகன் தலைமை வகித்தார். நாமக்கல் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் மூர்த்தி முன்னிலை வகித்தார்.
நாமக்கல் மேற்கு மாவட்ட துணை அமைப்பாளர் கண்ணன், நாமக்கல் மேற்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் மகில் பிரபாகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

