ADDED : செப் 17, 2026 06:05 AM
அ நிறம் | அளவு
நாமக்கல்:நாமக்கல்
மாநகரில் செல்லும் வாகனங்களில், அதிக ஒலி எழுப்பும், 'ஏர்ஹாரன்'கள்
பயன்படுத்துவதாக புகார் எழுந்தது.
இதையடுத்து, நாமக்கல் வடக்கு, தெற்கு
வட்டார போக்குவரத்து அலுவலர்கள் பதுவைநாதன், முருகேசன் ஆகியோர் தலைமையில்,
மோட்டார் வாகன ஆய்வாளர்கள் சக்திவேல், பிரபாகரன், செந்தில், செயலாக்க
பிரிவை சேர்ந்த செண்பகவள்ளி ஆகியோர் கொண்ட குழுவினர், நாமக்கல்
மாநகராட்சிக்குட்பட்ட, புது பஸ் ஸ்டாண்டில், நேற்று வாகன தணிக்கையில்
ஈடுபட்டனர்.அப்போது, 20 தனியார் பஸ்கள், 10 அரசு பஸ்கள் என, மொத்தம்,
30 பஸ்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில், 15 பஸ்களில் அதிக ஒலி
எழுப்பக்கூடிய, 'ஏர்ஹாரன்' பொருத்தப்பட்டிருப்பது தெரியவந்தது. அவற்றை
பறிமுதல் செய்து, பஸ் டிரைவர்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.
