/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கடன் தொல்லையால் ஜவுளிக்கடை ஓனர் விபரீதம்
/
கடன் தொல்லையால் ஜவுளிக்கடை ஓனர் விபரீதம்
ADDED : ஜூன் 01, 2025 01:11 AM
குமாரபாளையம், குமாரபாளையம், அய்யன்தோட்டம் பகுதியை சேர்ந்தவர் கணேசன், 35; ரெடிமேட் துணிக்கடை வைத்து நடத்தி வந்தார். வியாபாரத்துக்காக வங்கி மற்றும் தனி நபர்களிடம் கடன் பெற்றுள்ளார். கடன் தொகை அதிகரித்ததால், திரும்ப செலுத்த முடியாமல் சிரமப்பட்டு வந்துள்ளார். இதனால் மனமுடைந்த கணேசன், மனைவி ஹேமலதாவிடம், வேலைக்கு போனால் நிலையை சமாளிக்கலாம் என, தெரிவித்துள்ளார். இதனால், நேற்று முன்தினம் காலை, 9:00 மணிக்கு, ஹேமலதா, 28, வேலை தேட சென்றுள்ளார்.
இந்நிலையில், ஜவுளிக்கடை ஊழியர் ஜோதிமணி, கடை சாவியை வாங்க வீட்டிற்கு வந்துள்ளார். கதவு உள்பக்கமாக பூட்டியிருந்தது. கதவை தட்டியும் திறக்காததால், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது, படுக்கை அறையில் சேலையால் துாக்கிட்டு தொங்கிய நிலையில் கணேசன் இருந்துள்ளார். இதுகுறித்து, குமாரபாளையம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.