/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மோகனுார் டவுன் பஞ்.,ல் கொ.ம.தே.க., எம்.பி., பொதுமக்களுக்கு நன்றி தெரிவிப்பு

ADDED : ஜூலை 15, 2024 01:10 AM
மோகனுார்: நாமக்கல் லோக்சபா தொகுதியில், கொ.ம.தே.க., வேட்பாளர் மாதேஸ்வரன் வெற்றி பெற்று, எம்.பி.,யாக தேர்வு செய்யப்-பட்டார்.
இதையடுத்து, அவர், தொகுதியில் சுற்றுப்பயணம் மேற்-கொண்டு, பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்து வருகிறார்.அதன்படி, நேற்று மோகனுார் டவுன் பஞ்.,க்குட்பட்ட கலை-வாணி நகர், ராசிகுமாரிபாளையம் தெரு, பெரியசாமி நகர், தெற்கு தெரு, அக்ரஹாரம், காளியம்மன் கோவில் தெரு, தோட்டக்காரத்-தெரு, சுப்பிரமணியபுரம், புதுத்தெரு, ஆசிரியர் காலனி உள்பட, 15 வார்டுகளுக்கும் சென்று பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்தார். வழிநெடுகிலும் பொதுமக்கள், கூட்டணி கட்சியினர் வரவேற்பு அளித்தனர். அப்போது, 'பொதுமக்கள் கோரிக்கையை நிறை-வேற்ற நடவடிக்கை எடுப்பதாக' உறுதி அளித்தார்.தி.மு.க., ஒன்றிய செயலாளர் நவலடி, டவுன் பஞ்., செயலாளர் செல்லவேல், பஞ்., தலைவர் வனிதா, துணைத்தலைவர் சரவண-குமார், கொ.ம.தே.க., டவுன் பஞ்., செயலாளர் செல்வராஜ், மாவட்ட தலைவர் பழனிமலை, ஆட்சி மன்றக்குழு உறுப்பினர் துரை, பொருளாளர் மணி, விவசாய அணி செயலாளர் ரவிச்சந்-திரன் உள்பட பலர் பங்கேற்றனர்.