/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
'தாயுமானவன்' திட்டம்: அமைச்சர் துவக்கி வைப்பு
/
'தாயுமானவன்' திட்டம்: அமைச்சர் துவக்கி வைப்பு
ADDED : ஆக 13, 2025 07:17 AM
சேந்தமங்கலம்: முதல்வர் ஸ்டாலின், நேற்று சென்னையில், வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டை தாரர்களின் இல்லத்திற்கே சென்று அரிசி, சர்க்கரை உள்ளிட்ட ரேஷன் பொருட்களை வினியோகம் செய்யும், 'முதல்வரின் தாயுமானவர்' திட்டத்தை தொடங்கி வைத்தார்.
அதை தொடர்ந்து, நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை ஊராட்சி ஒன்றியம், சோளக்காடு ஆரியூரில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன், முதியோர்களின் வீட்டிற்கே சென்று ரேஷன் பொருட்களை வழங்கினார். உடன், சேந்தமங்கலம் எம்.எல்.ஏ., பொன்னுசாமி, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அரசு செயலாளர் லட்சுமி பிரியா, பழங்குடியினர் நலத்துறை இயக்குனர் அண்ணாதுரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

