/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
வரும் 9ல் நாயுடுகள் நலச்சங்கம் சார்பில் 26ம் ஆண்டு யுகாதி விழா கொண்டாட்டம்

ADDED : ஏப் 06, 2024 02:20 AM
நாமக்கல்:நாமக்கல்
மாவட்ட நாயுடுகள் நலச்சங்கம் சார்பில், ஆண்டுதோறும், 'யுகாதி' விழா
சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தாண்டு, 'யுகாதி' என்ற
தெலுங்கு வருடப்பிறப்பு விழா, வரும், 9ல் 26ம் ஆண்டு விழாவாக
கொண்டாடப்படுகிறது.
நாமக்கல்லில், காலை, 7:00 மணிக்கு யுகாதி
விழா துவங்குகிறது. தொடர்ந்து, மணமாலை நிகழ்ச்சி நடக்கிறது. அதில்,
மாநிலம் முழுதும் இருந்து, 700 மணமகன், மணமகள் ஜாதகங்கள் இடம் பெறும்.
அன்று மாலை, 3:00 முதல், ஓவியம், பேச்சு, மாறுவேடம், பாட்டு, நடன
போட்டிகள், மகளிருக்கான கோலப்போட்டியும் நடக்கிறது.
அதையடுத்து,
கடந்த கல்வியாண்டில், பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 அரசு பொதுத்தேர்வில்
அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியருக்கு, சிறப்பு பரிசும், போட்டியில்
வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்படுகிறது. 26ம்
ஆண்டு விழாவை சிறப்பிக்கும் வகையில், தமிழகம் முழுதும் இருந்து நாயுடு
சமூக பிரமுகர்கள் பங்கேற்கின்றனர். ஏற்பாடுகளை நாமக்கல் மாவட்ட
நாயுடுகள் நலச்சங்க தலைவர் வெங்கடசுப்ரமணியன், செயலாளர்
நாராயணன், பொருளாளர் தங்கவேல், தலைமை நிலைய செயலாளர் கோவிந்தராஜ்
உள்பட பலர் பங்கேற்றனர்.