/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
வருவாய்துறை அலுவலர் சங்கத்தினர் 2ம் நாள் பணி புறக்கணிப்பு போராட்டம்
/
வருவாய்துறை அலுவலர் சங்கத்தினர் 2ம் நாள் பணி புறக்கணிப்பு போராட்டம்
வருவாய்துறை அலுவலர் சங்கத்தினர் 2ம் நாள் பணி புறக்கணிப்பு போராட்டம்
வருவாய்துறை அலுவலர் சங்கத்தினர் 2ம் நாள் பணி புறக்கணிப்பு போராட்டம்
ADDED : நவ 28, 2024 01:18 AM
வருவாய்துறை அலுவலர் சங்கத்தினர்
2ம் நாள் பணி புறக்கணிப்பு போராட்டம்
நாமக்கல், நவ. 28-
கோரிக்கைகளை வலியுறுத்தி, வருவாய்துறை அலுவலர் சங்கத்தினர், 2ம் நாள் பணி புறக்கணிப்பு மற்றும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில், பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி, கடந்த அக்., 25ல், பெருந்திரள் முறையீடு இயக்கம், 29ல் ஒட்டுமொத்த தற்செயல் விடுப்பு போராட்டம் நடத்தப்பட்டது. மூன்றாம் கட்டமாக, பணி புறக்கணிப்பு மற்றும் தொடர் காத்திருப்பு போராட்டம், மாநிலம் முழுவதும், நேற்று முன்தினம் துவங்கியது.
நாமக்கல் மாவட்டத்தில், வருவாய்துறை அலுவலர்கள், இரண்டாம் நாள் பணி புறக்கணிப்பு மற்றும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த காத்திருப்பு போராட்டத்திற்கு, மாவட்ட தலைவர் ஆனந்தன் தலைமை வகித்தார். செயலாளர் விஜயகாந்த், பொருளாளர் பிரகாஷ், மத்திய செயற்குழு உறுப்பினர் ராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மூன்றாண்டுக்கு மேற்பட்ட அலுவலக உதவியாளர் காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். முதுநிலை வருவாய் ஆய்வாளர் பதவி உயர்வில் ஏற்பட்டுள்ள தேக்கநிலையை களைந்து, ஒருங்கிணைந்த பணி முதுநிலை தொடர்பாக தெளிவுரைகளை ஆணையர் வெளியிட வேண்டும். கருணை அடிப்படையிலான பணி நியமனத்திற்கான உச்சவரம்பை, 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதை ரத்து செய்து, மீண்டும் 25 சதவீதமாக நிர்ணயம் செய்ய வேண்டும். பேரிடர் மேலாண் பிரிவில் கலைக்கப்பட்ட, 97 பணியிடங்களை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.