/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
அ.தி.மு.க., வலிமை பெற வேண்டும் என்பதே நோக்கம்: செங்கோட்டையன்
/
அ.தி.மு.க., வலிமை பெற வேண்டும் என்பதே நோக்கம்: செங்கோட்டையன்
அ.தி.மு.க., வலிமை பெற வேண்டும் என்பதே நோக்கம்: செங்கோட்டையன்
அ.தி.மு.க., வலிமை பெற வேண்டும் என்பதே நோக்கம்: செங்கோட்டையன்
ADDED : செப் 10, 2025 01:02 AM
கோபி, ''அ.தி.மு.க., வலிமை பெற வேண்டும் என்பதுதான் என் நோக்கம்,'' என்று, டில்லியில் இருந்து திரும்பிய முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
டில்லி சென்ற செங்கோட்டையன், ஈரோடு மாவட்டம் கோபி குள்ளம்பாளையம் பண்ணை வீட்டுக்கு நேற்று மாலை, 5:00 மணிக்கு வந்தார். அப்போது வீட்டு வாயிலில் காத்திருந்த நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
ஹரித்வார் செல்ல டில்லி சென்றேன். டில்லி சென்ற அரை மணி நேரத்தில், நான் தங்கியிருந்த இடத்தில், உள்துறை அமைச்சரை அமித்ஷாவை சந்திக்க அனுமதி கொடுக்கப்பட்டது. அவரை சந்தித்த போது நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனையும் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. 'எல்லோரையும் ஒருங்கிணைத்து, அ.தி.மு.க., இயக்கத்தை வலிமைப்படுத்தி, நம்முடைய கூட்டணி என்பது மாபெரும் வெற்றி பெற வேண்டும்' என்பதையே அவர்களிடமும் கூறினேன். அந்த சமயத்தில் அங்கு வந்த ரயில்வே துறை அமைச்சரிடம், ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயிலை பழையபடி, இரவு, 10:00 மணிக்கு இயக்க வலியுறுத்தி, அவர் கோரிக்கைப்படி மனுவும் எழுதி கொடுத்தேன். ஜனநாயக ரீதியாக ஒவ்வொருவரும் கருத்து கூற உரிமை உள்ளது. அப்படி இருக்கும்போதுதான் ஜனநாயகம் காக்கப்படும். இவ்வாறு கூறினார்.
நிருபர்கள் அடுத்தடுத்து கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளிக்காமல், வீட்டுக்குள் சென்று விட்டார்.