/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
சாக்கடையில் 'முட்டு' பிரித்த சிறுவன்; குழந்தைகள் நல அதிகாரி விசாரணை
/
சாக்கடையில் 'முட்டு' பிரித்த சிறுவன்; குழந்தைகள் நல அதிகாரி விசாரணை
சாக்கடையில் 'முட்டு' பிரித்த சிறுவன்; குழந்தைகள் நல அதிகாரி விசாரணை
சாக்கடையில் 'முட்டு' பிரித்த சிறுவன்; குழந்தைகள் நல அதிகாரி விசாரணை
ADDED : ஆக 07, 2024 07:29 AM
ராசிபுரம்: ராசிபுரம் நகராட்சி கடைவீதி யில் இருந்து, கிருஷ்ணன் தெருவுக்கு செல்லும் வழியில் சாக்கடை பாலம் கட்டப்பட்டுள்ளது.
சில நாட்களாக பெய்த மழையால், சாக்கடையுடன் மழைநீர் சேர்ந்து குட்டைபோல் நின்றது. இந்நிலையில், நேற்று முன்தினம் காலை, பாலம் கட்டிய மேஸ்திரிகள் கால்வாய் உள்ளே இறங்கி கான்கிரீட்டுக்கு போட்ட முட்டு கட்டைகளை பிரிக்க முயன்றனர். ஆனால், மழைநீருடன், சாக்கடை நீர் தேங்கி நின்றதால் அவர்களால் உள்ளே இறங்க முடியவில்லை. இதையடுத்து அங்கிருந்த ஒரு சிறுவனை அழைத்து முட்டு மரத்தை பிரித்துள்ளனர்.சிறுவன், கால்வாயில் இறங்கி முட்டை பிரிக்கும் வீடியோ, சமூக வலைதளங்களில் பரவியது. இதில், சிறுவனை வைத்து வேலை வாங்குவதாக புகார் எழுந்தது. இதையடுத்து நகராட்சி சார்பில், நேற்று ராசிபுரம் போலீசில் புகாரளித்துள்ளனர். இதுகுறித்து ராசிபுரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.இந்நிலையில், நேற்று மாவட்ட குழந்தைகள் நல அலுவலக அதிகாரி மோகனப்பிரியா, ராசிபுரம் வந்து வேலை நடந்த இடத்தை ஆய்வு செய்தார். மேலும், சிறுவனின் பெற்றோர், ஒப்பந்ததாரர் பெரியசாமி ஆகியோரிடம் விசாரணை நடத்தினார். மேலும், நாமக்கல் காப்பகத்திற்கு சிறுவனை அழைத்து சென்றார்.